அமைச்சர் பொன்முடியின் பதவி பறிப்பு..திமுக துணை பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமனம்
திமுகவின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருச்சி சிவா அப்பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்ச்சை பேச்சு
திருவாரூர் கே.தங்கராசு நூற்றாண்டு விழாவில், அமைச்சர் பொன்முடி மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் மோசமாக பேசிதாக சர்ச்சை கிளம்பியது.
அதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பொன்முடிக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் திமுக எம்.பி கனிமொழியும் தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.
திருச்சி நியமனம்
இதன் விளைவாக அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதாவது, திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக, எம்.பி திருச்சி சிவா கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, திமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினும் வெளியிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |