உலகக்கோப்பை டெஸ்ட் இறுதிப்போட்டியில் அதிரடி சதம் விளாசிய வீரர்: ஜாம்பவானுடன் ஒப்பிட்டு புகழும் முன்னாள் கேப்டன்
இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் சதம் விளாசிய அவுஸ்திரேலிய வீரர் டிராவில் ஹெட்டை, முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
உலகக்கோப்பை டெஸ்ட் இறுதிப்போட்டி
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் நேற்று ஓவல் மைதானத்தில் தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தெரிவு செய்தார்.
அதன்படி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில், உஸ்மான் கவாஜா ஓட்டங்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பவுண்டரிகளை விரட்டிய டேவிட் வார்னர் 43 ஓட்டங்களிலும், லபுசாக்னே 26 ஓட்டங்களிலும் அவுட் ஆகினர்.
அதன் பின்னர் கைகோர்த்த ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஜோடி இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தது.
Ryan Pierse/Getty Images
டிராவிஸ் ஹெட் சதம் விளாசல்
இதன்மூலம் முதல் நாள் முடிவில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 327 ஓட்டங்கள் குவித்தது. நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மித் 95 (227) ஓட்டங்களுடனும், அதிரடியில் மிரட்டிய டிராவிஸ் ஹெட் 146 (156) ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
AP
ஹெட் ஒரு சிக்ஸர், 22 பவுண்டரிகள் என விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார். அவரது ஆட்டத்தினை முன்னாள் வீரர்கள் சிலாகித்து புகழ்ந்துள்ளனர்.
குறிப்பாக, ஆடம் கில்கிறிஸ்ட் தனது டெஸ்ட் கிரிக்கெட்டில் 81.95 என்ற ஸ்ட்ரைக்-ரேட்டை வைத்திருந்தார். அதேபோல் நேற்றைய இன்னிங்சில் ஹெட் அதிரடி கட்டியிருந்தார்.
AAP Image/Dean Lewins
ரிக்கி பாண்டிங் புகழாரம்
ஹெட்டின் ஆட்டம் குறித்து அவுஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறும்போது, 'அவர் அநேகமாக கில்கிரிஸ்ட்டைப் போன்றவர். உண்மையில் அவர் கில்லி (கில்கிறிஸ்ட்) இதுவரை செய்ததை விட இப்போது வேகமாக ஸ்கோர் அடித்துள்ளார். இந்த (உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்) தகுதி காலத்தின் மூலம் அவரது ஸ்ட்ரைக்-ரேட் 81 ஆகும். இது உலகில் 500 ஓட்டங்களுக்கு மேல் எடுத்ததை விட அதிகமாக உள்ளது.
அவரது நம்பிக்கை அதிகரித்து வருவதை ஆட்டம் வெளிப்படுத்துகிறது, ஸ்ட்ரைக்-ரேட் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர் தனது இன்னிங்சின் தொடக்கத்திலேயே பவுண்டரிகளை அடித்தார்.
இது உங்கள் மிடில் ஆர்டர் வீரர்களிடம் இருந்து நீங்கள் விரும்பும் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது. மேலும் அவரது கடந்த இரு ஆண்டு குறிப்பிடத்தக்க ஒன்று' என புகழ்ந்துள்ளார்.
Scott Barbour/Getty Images