உங்களின் பேச்சுத்திமிரு வக்கிரமாக இருந்தது! ஆவேசமடைந்த பிரபல நடிகர்
பருத்திவீரன் படம் தொடர்பில் அமீரை குற்றம்சாட்டி வரும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை, தற்போது நடிகர் பொன்வண்ணன் கடுமையாக சாடியுள்ளார்.
அமீர் - ஞானவேல் ராஜா சர்ச்சை
இயக்குநர் அமீரை 'பருத்திவீரன்' படம் தொடர்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அளித்த நேர்காணல்களில் குற்றம்சாட்டி வருகிறார்.
அவரது குற்றச்சாட்டுகளை அமீர் மறுத்ததைத் தொடர்ந்து, நடிகர்கள் சசிக்குமார் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் ஞானவேல் ராஜாவை கண்டித்து பேசினர்.
இந்த நிலையில் பருத்திவீரன் படத்தில் நடித்திருந்த இயக்குநர், நடிகர் பொன்வண்ணனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகர் பொன்வண்ணன் கண்டனம்
அவர் கூறுகையில், 'பருத்திவீரனின் 2ஆம் கட்டப்படப்பிடிப்புகள் தொடங்கியபோது, அமீர் அவர்கள் பொறுப்பேற்று, பல நண்பர்கள், உறவினர்கள் மூலமாக கடன் வாங்கி படப்பிடிப்புக்கான செலவுகளை செய்தார் என்பதை நானறிவேன்! நானும் உடனிருந்த சமுத்திரகனியும், செலவுகளைச் சுட்டிக்காட்டி பேசிய போதெல்லாம் எங்களை சமாதானப்படுத்திவிட்டு சமரசம் செய்து கொள்ளாமல் இதே மனநிலையுடன்தான் வேலை பார்த்தார்.
பணத்துக்காக தனது ''படைப்பிற்கு'' என்றும் துரோகம் செய்பவர் அல்ல அமீர் என்பதை நான் அவருடன் தொடர்ந்து பயணித்தவன் என்ற முறையில் உறுதியாக கூற முடியும்' என கூறியுள்ளார்.
மேலும் அவர், 'உலகமே அங்கீகரித்த அப்படைப்பையும், அதனை படைப்பாளியையும் உங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக திருடன், வேலை தெரியாதவர் என கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல..! அந்த ஊடக பேட்டிமுழுக்க உங்களின் உடல்மொழியும், பேச்சுத்திமிரும், வக்கிரமாக இருந்தது..!
தங்கள் தயாரிப்பில் வந்த இருட்டறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தை போன்று அளவுகோலாக வைத்து பருத்திவீரனையும், அதனது படைப்பாளியையும் எடைபோட்டுவிட்டீர்களோ! வேண்டாம் இந்த தரம் தாழ்ந்த மனநிலை..!' என காட்டமாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |