போரில் ஏழ்மையான ரஷ்ய வீரர்களை பலிகடா ஆக்கிய புடின்! அம்பலமான உண்மை
உக்ரைனுடனான போரில் உயிரிழந்த பெரும்பாலான ரஷ்ய வீரர்கள் ஏழ்மையான பின்புலம் உள்ளவர்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து 63வது நாளாக போர் தொடுத்து வரும் ரஷ்யா, மரியுபோலில் உள்ள Azovstal எஃகு ஆலை மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே, ஏப்ரல் 26ம் திகதி வரையிலான நிலவரப்படி, உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யா 22,100 ராணுவ வீரர்களை இழந்துள்ளதாக உக்ரைன் ராணுவ தளபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, 918 டேங்கிகள், 2308 ராணுவ வாகனங்கள், 184 பேர் விமானங்கள் மற்றும் 154 ஹெலிகாப்டர்களை ரஷ்ய இழந்துள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைன் உடனான போரில் கொல்லப்பட்ட பெரும்பாலான ரஷ்ய வீரர்கள் ஏழ்மையான பின்புலம் உள்ளவர்கள் என Mediazona கண்டறிந்துள்ளது.
Mediazona வெளியிட்ட அதிகாரப்பூர்வ தரவின் படி, 12 மில்லியன் மக்கள் வசிக்கும் மாஸ்கோவில் வெறும் 3 ராணுவ வீரர்கள் மட்டுமே இறந்துள்ளனர்.
வார்த்தைகளால் விவரிக்க முடியாத சோகம்.. தஞ்சை தேர் விபத்து: தலைவர்கள் இரங்கல்
ஆனால், குறைந்த வருமானம் மற்றும் சிறிய மக்கள் தொகை கொண்ட பல ரஷ்ய பிராந்தியங்களைச் சேர்ந்த பெரும்பாலானோர் உக்ரைனுடனான போரில் கொல்லப்பட்டுள்ளதாக Mediazona குறிப்பிட்டுள்ளது.