32 பந்தில் 61 ஓட்டங்கள்! வாணவேடிக்கை காட்டிய பூரன்
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ட்ரின்பாகோ அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியோட்ஸ் அணியை வீழ்த்தியது.
ரூதர்போர்டு மிரட்டல் அரைசதம்
வார்னர் பார்க் மைதானத்தில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் Trinbago மற்றும் St Kitts அணிகள் மோதின. முதலில் ஆடிய St Kitts அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்கள் குவித்தது.
கேப்டன் ரூதர்போர்டு 38 பந்துகளில் 62 ஓட்டங்கள் விளாசினார். இதில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடங்கும். ஆண்ட்ரே பிளெட்சர் 32 (17) ஓட்டங்கள் எடுத்தார்.
சுனில் நரைன் 3 விக்கெட்டுகளும், டிஜே பிராவோ 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
Truly a Captain’s knock by Sherfane Rutherford, gets #patriots to a fighting total#sknp #sknpatriots #patriots #cpl23 #biggestpartyinsport #cricketplayedlouder #sknpvstkr pic.twitter.com/8LvJJqa6o2
— SKNPatriots (@sknpatriots) August 28, 2023
பூரன் ருத்ர தாண்டவம்
பின்னர் களமிறங்கிய Trinbago அணியில் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.
அதனைத் தொடர்ந்து வந்த நிக்கோலஸ் பூரன் ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் 32 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்கள் விளாசினார்.
If you loved Nicky's performance, ??? ?? ??? ??? ????? ??? ????...?#SKNPvTKR #WaveTheRed #WeAreTKR #CPL2023 @nicholas_47 pic.twitter.com/Db6Pa3awcL
— Trinbago Knight Riders (@TKRiders) August 28, 2023
பொல்லார்டு - ரசல் சரவெடி ஆட்டம்
டக்கர் 36 ஓட்டங்களில் அவுட் ஆனதைத் தொடர்ந்து, கேப்டன் பொல்லார்டு மற்றும் ரசல் அதிரயாக ஆடி வெற்றியை உறுதி செய்தனர்.
Trinbago அணி 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 180 ஓட்டங்கள் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது.
CPLT20/Getty Images
பொல்லார்டு 16 பந்தில் 5 சிக்ஸருடன் 37 ஓட்டங்களும், ஆண்ட்ரே ரசல் 8 பந்தில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 23 ஓட்டங்களும் விளாசினார்.
அதிரடியாக அரைசதம் அடித்த பூரன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
Getty Images
Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |