100வது இன்னிங்சில் அரைசதம் விளாசிய கேப்டன்! கோப்பையை தட்டித் தூக்கிய பாகிஸ்தான்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
சதம் விளாசிய குர்பாஸ்
இலங்கை ஹம்பன்டோட மைதானத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்தது.
முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணியில் இஃப்ராஹிம் ஜட்ரான் 80 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். ருத்ர தாண்டவம் ஆடிய குர்பாஸ் 151 ஓட்டங்கள் குவித்தார். இதில் 3 சிக்ஸர், 14 பவுண்டரிகள் அடங்கும்.
Twitter (ACBofficials)
பின்னர் வந்த நபி 29 ஓட்டங்களும், ஷாஹிடி 15 ஓட்டங்களும் எடுக்க ஆப்கானிஸ்தான் அணி 300 ஓட்டங்கள் குவித்தது.
பாபர் அசாம் நூறாவது இன்னிங்சில் அரைசதம்
அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் பஹர் ஜமான் 30 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். எனினும் இமாம் உல் ஹக் - பாபர் அசாம் கூட்டணி 118 ஓட்டங்கள் குவித்தது.
கேப்டன் பாபர் அசாம் 53 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். 100வது இன்னிசில் விளையாடிய பாபர் அசாமிற்கு இது 27வது அரைசதம் ஆகும்.
அதன் பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். சதத்தினை நோக்கி சென்ற இமாம் உல் ஹக் 91 ஓட்டங்களில் அவுட் ஆனார். அதிரடி காட்டிய ஷதாப் கான் 48 ஓட்டங்களில் இருந்தபோது, பாரூக்கி மான்கட் முறையில் அவரை அவுட் செய்தார்.
Twitter (PCB)
தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்
இதனால் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்களை இழந்தது. கடைசி 2 பந்துகளில் 3 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், நசீம் ஷா பவுண்டரி விளாசி அணியை வெற்றி பெற வைத்தார்.
Twitter (PCB)
ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் பாரூக்கி 3 விக்கெட்டுகளும், முகம்மது நபி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நாளை கொழும்பில் நடக்க உள்ளது.
Twitter (PCB)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |