சிக்ஸர் மழைபொழிந்த நிகோலஸ் பூரன்! 26 பந்தில் 65 ரன்..மே.தீவுகள் அபார வெற்றி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பூரன் விஸ்வரூபம்
டிரினிடாட்டில் நடந்த டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 174 ஓட்டங்கள் குவித்தது. ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 76 (42) ஓட்டங்களும், பாட்ரிக் க்ருகர் 44 (32) ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் அலிக் அதனசி 40 (30) ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய நிகோலஸ் பூரன் (Nicolas Pooran) விஸ்வரூப ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
Player of the match performance from Nicholas Pooran to steer the #MenInMaroon home! ???#WIvSA #T20Fest pic.twitter.com/xQYbqsLrwm
— Windies Cricket (@windiescricket) August 23, 2024
ஹோப் 51
மறுமுனையில் ஷாய் ஹோப் 36 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
சிக்ஸர்களை பறக்கவிட்ட பூரன் ஆட்டமிழக்காமல் 26 பந்தில் 65 ஓட்டங்கள் விளாசினார். இதில் 7 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடங்கும்.
இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 176 ஓட்டங்கள் எடுத்து இமாலய வெற்றி பெற்றது.
7️⃣ Maximums, 2️⃣ Fours ??
— Windies Cricket (@windiescricket) August 23, 2024
Four consecutive 6️⃣s in one over ?
An unbelievable performance from Nicholas Pooran#WIvSA #T20Fest #MenInMaroon pic.twitter.com/QGlh5f6RwZ
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |