ராக்கெட் சிக்ஸர்களை பறக்கவிட்ட பூரன்! குஜராத் டைட்டன்ஸை அதிரடியாக வீழ்த்திய லக்னோ (வீடியோ)
ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
சாய் சுதர்ஸன், சுப்மன் கில் அரைசதம்
நடப்பு ஐபிஎல் தொடரின் 26வது போட்டியில் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் மோதின.
முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்ஸன், சுப்மன் கில் கூட்டணி ருத்ர தாண்டவம் ஆடியது.
𝘽𝙧𝙞𝙡𝙡𝙞𝙖𝙣𝙩 𝘽𝙞𝙨𝙝𝙣𝙤𝙞 😎
— IndianPremierLeague (@IPL) April 12, 2025
An over with double delight that has put #LSG back into the match ✌️
Updates ▶ https://t.co/VILHBLEerV #TATAIPL | #LSGvGT | @bishnoi0056 pic.twitter.com/4ylELVJpqm
அரைசதம் விளாசிய கில் 38 பந்துகளில் 60 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே 56 (37) ஓட்டங்கள் எடுத்திருந்த சாய் சுதர்ஸனும் அவுட் ஆனார்.
பின்னர் வந்த வீரர்கள் சொதப்ப, ரூதர்போர்டு 19 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 22 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) 6 விக்கெட்டுக்கு 180 ஓட்டங்கள் குவித்தது. ஷர்துல் தாகூர், ரவி பிஸ்னோய் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
Where can you find fireworks tonight? 🎆 🤔
— IndianPremierLeague (@IPL) April 12, 2025
In Lucknow, from the bat of Nicholas Pooran 😎
Updates ▶ https://t.co/VILHBLEerV #TATAIPL | #LSGvGT | @nicholas_47 pic.twitter.com/Lb9E6XQoPB
பூரன் சிக்ஸர் மழை
அதன் பின்னர் ரிஷாப் பன்ட் மற்றும் எய்டன் மார்க்ரம் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பவுண்டரிகள் விரட்டிய ரிஷாப் பன்ட் 18 பந்துகளில் 21 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் (Nicholas Pooran) சிக்ஸர் மழை பொழிந்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய எய்டன் மார்க்ரம் (Aiden Markram) 31 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 58 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
குஜராத் அணிக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய பூரன் 7 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 61 (34) ஓட்டங்கள் எடுத்து ரஷீத் கான் ஓவரில் ஆட்டமிழந்தார்.
எனினும், ஆயுஷ் பதோணி 20 பந்துகளில் 28 ஓட்டங்கள் விளாச, லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணி 19.3 ஓவரில் 186 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |