பொல்லார்ட், பூரன் ருத்ர தாண்டவம்! சூப்பர் கிங்ஸை வீழ்த்தி.,கெத்தாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த MI
டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான சேலஞ்சர்ஸ் போட்டியில் MI நியூயார்க் அணி 7 விக்கெட் வீழ்த்தியது.
பாப் டூ பிளெஸ்ஸிஸ் 59 ஓட்டங்கள்
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் சேலஞ்சர்ஸ் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் MI நியூயார்க் அணிகள் மோதின.
முதலில் ஆடிய டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுக்கு 165 ஓட்டங்கள் எடுத்தது. அணித்தலைவர் பாப் டூ பிளெஸ்ஸிஸ் 42 பந்துகளில் 59 ஓட்டங்கள் விளாசினார். அக்கேல் ஹொசைன் 32 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 55 ஓட்டங்களும், டோனோவன் பெர்ரேரா 32 (20) ஓட்டங்களும் குவித்தனர்.
ட்ரிஸ்டன் லூஸ் 3 விக்கெட்டுகளும், ருஷில் உகர்கர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். பின்னர் ஆடிய MI நியூயார்க் அணியில் டிகாக் 6 ஓட்டங்களிலும், பிரேஸ்வெல் 8 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, மோனக் படேல் 49 ஓட்டங்கள் விளாசினார்.
அடுத்து கைகோர்த்த அணித்தலைவர் நிக்கோலஸ் பூரன் (Nicholas Pooran) மற்றும் கீரேன் பொல்லார்டு (Kieron Pollard) இருவரும் சிக்ஸர்களை பறக்கவிட்டனர்.
அதிரடி கூட்டணி
இந்த கூட்டணியில் அதிரடியில் MI நியூயார்க் அணி 19 ஓவரில் 172 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
பூரன் 36 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்களும், பொல்லார்டு 22 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 47 ஓட்டங்களும் எடுத்து களத்தில் நின்றனர்.
Here’s how we got into the Final…again! 💙#OneFamily #MINewYork #MLC #TSKvMINY pic.twitter.com/TD6SJBcpvA
— MI New York (@MINYCricket) July 12, 2025
இந்த வெற்றியின் மூலம் MI நியூயார்க் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 13ஆம் திகதி நடைபெற இறுதிப்போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியை MI நியூயார்க்கை எதிர்கொள்கிறது.
Pooran goes down the ground. Pooran goes out of the ground. 🙌#OneFamily #MINewYork #MLC #TSKvMINY pic.twitter.com/MWrsE5HOyC
— MI New York (@MINYCricket) July 12, 2025
#MLC 2025 𝐅𝐈𝐍𝐀𝐋 - Here we come! 😎🔥#OneFamily #MINewYork #MLC #TSKvMINY pic.twitter.com/KP3OKHf8yU
— MI New York (@MINYCricket) July 12, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |