சிக்ஸர் மழைபொழிந்த பூரன், மார்ஷ்! டெல்லிக்கு 210 ரன் இலக்கு..அனல் பறக்கும் ஐபிஎல்
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸ் 209 ஓட்டங்கள் குவித்தது.
சிக்ஸர் மழை
விசாகப்பட்டினத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வருகிறது.
முதலில் களமிறங்கிய லக்னோ அணியில் மார்க்ரம் 15 ஓட்டங்களில் நடையைக் கட்டினார். அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷுடன் இணைந்து வாணவேடிக்கை காட்டினார்.
இவர்களின் கூட்டணி டெல்லி அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது. சிக்ஸர்மழை பொழிந்த மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh) 36 பந்துகளில் 6 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 72 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
In the arc, out of the park 🫡pic.twitter.com/FdLUUnxjTU
— Lucknow Super Giants (@LucknowIPL) March 24, 2025
பூரன் ருத்ர தாண்டவம்
பின்னர் வந்த ரிஷாப் பண்ட் 6 பந்துகளில் ரன் எடுக்காமல் குல்தீப் ஓவரில் அவுட் ஆனார். ருத்ர தாண்டவமாடிய நிக்கோலஸ் பூரன் (Nicholas Pooran) 30 பந்துகளில் 7 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 75 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்துவீச்சில் போல்டானார்.
எனினும் டேவிட் மில்லர் நின்று ஆட, ஏனைய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 209 ஓட்டங்கள் குவித்தது.
மில்லர் 19 பந்துகளில் 27 ஓட்டங்கள் குவித்தார். டெல்லி அணியின் தரப்பில் மிட்சேல் ஸ்டார்க் (Mitchell Starc) 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
Nicky P, like he never left 🙌pic.twitter.com/3JzFe1z1MR
— Lucknow Super Giants (@LucknowIPL) March 24, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |