பட்டையை கிளப்பிய கேப்டன் பூரன்! அதிரடி வீரர் ரஸலின் போராட்டம் வீண் (வீடியோ)
சர்வதேச லீக் டி20 தொடர் போட்டியில் பூரனின் MI எமிரேட்ஸ் அணி, 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபுதாபி நைட்ஸ் ரைடர்ஸை வீழ்த்தியது.
பூரன், ஷெப்பர்ட் அதிரடி
ஷேய்க் சயீத் மைதானத்தில் நடந்த போட்டியில் MI எமிரேட்ஸ் மற்றும் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய MI எமிரேட்ஸ் அணியில் குசால் பெரேரா 23 ஓட்டங்களும், டாம் பான்டன் 9 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
நிதானமாக ஆடிய முகமது வசீம் 38 (35) ஓட்டங்கள் எடுத்தார். எனினும் அதிரடியில் மிரட்டிய அணித்தலைவர் நிக்கோலஸ் பூரன் (Nicholas Pooran) 26 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 49 ஓட்டங்கள் விளாசினார்.
You don't bowl there to Nicky P! 😎#OneFamily #MIEmirates #ADKRvMIE
— MI Emirates (@MIEmirates) January 21, 2025
pic.twitter.com/WaHlxcZsK1
அதேபோல் ரோமாரியோ ஷெப்பர்ட் 13 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 38 ஓட்டங்கள் குவிக்க, MI எமிரேட்ஸ் 186 ஓட்டங்கள் சேர்த்தது.
Romario Shepherd smashed 26 in the last 5 balls of the innings.🤯
— DEEP SINGH (@CrazyCricDeep) January 21, 2025
6 , 4 , 4 , 6 , 6
MI Emirates scored 60 runs in the last 3 overs with the help of Nicholas 49(26) Pooran and Romario Shepherd 38*(13) firepower batting.🔥🔥#ILT20 #MIEmirates pic.twitter.com/2rH3gYr7pa
போராடிய ரஸல்
பின்னர் களமிறங்கிய அபுதாபி அணியில் மேயர்ஸ் 22 ஓட்டங்களும், கோஸ் 34 ஓட்டங்களும் எடுத்து நல்ல தொடக்கம் அமைத்தனர். ஆனால் அடுத்து வந்த வீரர்கள் ஜோசப், ஷெப்பர்ட் பந்துவீச்சில் சீட்டு கட்டுபோல் சரிந்தனர்.
ஆந்த்ரே ரஸல் மட்டும் தனியாளாக போராட, ஏனைய வீரர்கள் சொதப்பியதால் அபுதாபி அணி 158 ஓட்டங்களே எடுத்து தோல்வியுற்றது.
கடைசி வரை களத்தில் நின்ற ரஸல் 23 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 37 ஓட்டங்கள் எடுத்தார். ஜோசப், ஷெப்பர்ட் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
Good game of cricket, @MIEmirates 🤝
— Abu Dhabi Knight Riders (@ADKRiders) January 21, 2025
See you again in a couple of days 🏏#WeAreADKR | #AbuDhabiKnightRiders | #DPWorldILT20 | #ADKRvMIE pic.twitter.com/i8XshmL9kL
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |