சீனாவிற்கு கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கடும் நெருக்கடியில் 75 ஏழை நாடுகள்

China
By Arbin May 27, 2025 09:52 AM GMT
Report

சீனாவிடம் இருந்து வாங்கிய கடனை இந்த ஆண்டு திருப்பிச் செலுத்தும் கடும் நெருக்கடியில் உலகில் மிக மோசமான பொருளாதார நிலையில் இருக்கும் 75 நாடுகள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தமாக 22 பில்லியன்

வெளியான அறிக்கையின் அடிப்படையில், இந்த 75 நாடுகளும் மொத்தமாக 22 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை சீனாவிற்கு இந்த ஆண்டு திருப்பிச் செலுத்த வேண்டும்.

சீனாவிற்கு கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கடும் நெருக்கடியில் 75 ஏழை நாடுகள் | Poorest 75 Nations Debt Repayments To China

இந்த நாடுகள் மொத்தமாக 35 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை சீனாவிடம் இருந்து இதுவரை கடனாகப் பெற்றுள்ளதாகவே தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டு முதல் அடுத்த பத்தாண்டுகளுக்கு ஏற்கனவே அளித்துள்ள கடனைத் திருப்பி வாங்கும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபடும் என்றே கூறுகின்றனர்.

சீனாவிற்கு பெருந்தொகையை திருப்பிச் செலுத்த வேண்டிய அழுத்தம் காரணமாக சுகாதாரம் மற்றும் கல்விக்கான உள்ளூர் நிதியுதவியை குறைக்கும் நிலை பல நாடுகளுக்கும் ஏற்பட இருக்கிறது.

இந்தியாவிற்கு எதிராக... பாகிஸ்தான் இராணுவ தளபதியை நேரில் பாராட்டிய துருக்கி ஜனாதிபதி

இந்தியாவிற்கு எதிராக... பாகிஸ்தான் இராணுவ தளபதியை நேரில் பாராட்டிய துருக்கி ஜனாதிபதி

இந்தக் கடன்கள் அனைத்தும் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் கனவுத் திட்டமான பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சியின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. 2016ல் மட்டும் இந்த திட்டத்திற்கு என சீனா 50 பில்லியன் டொலர் தொகைக்கும் அதிகமாக கடனாக அளித்துள்ளது.

ஆனால், ஏழை நாடுகளுக்கு கடன் அளித்து அந்த நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டில் சிக்கவைக்கும் சீனாவின் சூழ்ச்சி இதுவென குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், சீனா அதை புறந்தள்ளியுள்ளது.

சீனா இதுவரை

மட்டுமின்றி, கடன் வாங்கிய நாடுகளும் சீனாவிற்கு எதிராக கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது. மேலும், புதிதாக சில நாடுகளுக்கும் சீனா பெருமளவு கடன் அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவிற்கு கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கடும் நெருக்கடியில் 75 ஏழை நாடுகள் | Poorest 75 Nations Debt Repayments To China

தைவானில் இருந்து சீனாவிற்கு தங்கள் தூதரக உறவை மாற்றிய 18 மாதங்களுக்குள் ஹோண்டுராஸ், நிகரகுவா, சாலமன் தீவுகள், புர்கினா பாசோ மற்றும் டொமினிகன் குடியரசு ஆகிய நாடுகளுக்கு கடனுதவி அளித்துள்ளது.

மட்டுமின்றி, பாகிஸ்தான், கஜகஸ்தான், லாவோஸ் மற்றும் மங்கோலியா, அத்துடன் அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் இந்தோனேசியா போன்ற முக்கியமான கனிமங்கள் மற்றும் உலோகங்களை உற்பத்தி செய்யும் நாடுகளுக்கும் சீனா தொடர்ந்து கடன் அளித்து வருகிறது.

2021ல் வெளியான தரவுகளின் அடிப்படையில் சீனா இதுவரை பல நாடுகளுக்கும் 385 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை கடனாக அளித்துள்ளது என்றே கூறப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US