ட்ரம்பின் நடவடிக்கை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்! கண்டித்த போப் பிரான்சிஸ்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுக்கும் நடவடிக்கைகளை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என போப் பிரான்சிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் டொனால்ட் ட்ரம்ப் ஈடுபட்டு வருகிறார்.
அவரது இந்த நடவடிக்கைக்கு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் போப் பிரான்சிஸும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அமெரிக்க பிஷப்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அதில் அவர், "ட்ரம்ப் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நலிந்த பிரிவினரை மோசமாக பாதிக்கிறது. இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். குடியேற்ற எதிர்ப்பு பிரச்சாரங்கள் கூடாது. நாட்டில் சட்டவிரோதமாக வசிக்கிறார்கள் என்பதற்காக மட்டும் குடியேறியவர்களை, வலுக்கட்டாயமாக நாடு கடத்துவது அவர்களின் கண்ணியத்தை இழக்க செய்யும் செயல்.
நாடு கடத்தல் மோசமாக முடியும். கடினமான சூழ்நிலைகளில் இருந்து வந்தவர்கள் குடியேறியவர்கள். அவர்களை வலுக்கட்டாயமாக நாடு கடத்துவது, பெண்கள் மற்றும் ஆண்களின் கண்ணியத்தையும், சுயமரியாதையையும் இழக்க செய்கிறது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |