மிக மோசமான கட்டத்தில் போப் பிரான்சிஸ்... முதல் முறையாக ஒப்புக்கொண்ட வத்திக்கான்
கடந்த 24 மணி நேரத்தில் போப் பிரான்சிஸின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என வத்திக்கான் முதல் முறையாகவும் தெரிவித்துள்ளது.
உடல்நிலை தற்போது
அத்துடன் செயற்கையாக ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வருவதாகவும் இரத்தமாற்றம் தேவைப்பட்டது என்றும் வெளிப்படுத்தியுள்ளனர். போப் பிரான்சிஸின் உடல்நிலை தொடர்பில் சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வத்திக்கான்,
இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்ட 88 வயதான போப் பிரான்சிஸ், நீண்டகால ஆஸ்துமா போன்ற சுவாச நெருக்கடியை எதிர்கொண்டு வந்தார். போப் பிரான்சிஸின் உடல்நிலை தற்போது மோசமடைந்துள்ளதாகவும், ஆபத்து கட்டத்தை அவர் தாண்டவில்லை என்றும் அந்த அறிக்கையில் வத்திக்கான் குறிப்பிட்டுள்ளது.
மேலும், போப் பிரான்சிஸ் விழிப்புடன் இருக்கிறார், நேற்று அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும், அன்றைய தினம் நாற்காலியில் கழித்தார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
பல நாட்களாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து, பிப்ரவரி 14 அன்று போப் பிரான்சிஸ் ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது சுவாசப் பிரச்சினை காரணமாக மருத்துவர்கள் அதிக அளவு ஆக்ஸிஜன் செலுத்த வேண்டியிருந்தது என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது.
மேலும், அவருக்கு இரத்த சோகையுடன் தொடர்புடைய குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை இருப்பதாக சோதனைகளில் தெரிய வந்ததால் இரத்தமாற்றம் அவசியமானது என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
வத்திக்கான் மக்களை
இரட்டை நிமோனியா என்பது ஒரு தீவிரமான தொற்று ஆகும், இது இரு நுரையீரல்களையும் வீக்கப்படுத்தி வடுக்களை ஏற்படுத்தக்கூடும், இதனால் சுவாசிக்க கடினமாக இருக்கும். இந்த நிலையில், போப் பிரான்சிஸ்இன் நிலை மிகவும் சிக்கலான கட்டத்தில் இருப்பதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.
கத்தோலிக்க மதத்தின் கால் நூற்றாண்டு கொண்டாட்டமான வத்திக்கானின் புனித ஆண்டின் தொடக்கத்தில் போப் பிரான்சிஸ் நோய்வாய்ப்பட்டுள்ளது வத்திக்கான் மக்களை கண்ணீர்ல் ஆழ்த்தியுள்ளது.
இந்த வார இறுதியில், போப் பிரான்சிஸ் டீக்கன்களை வரவேற்று கொண்டாட இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுமா என்பது சந்தேகமே என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |