கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ்(pope francis), கடந்த சில மாதங்களாகவே உடல் நலன் பாதிக்கப்பட்டு இருந்தார்.
போப் பிரான்சிஸ்
சுவாசப் பாதையில் பாதிப்பு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதனையடுத்து, உடல்நலன் சீரானதும், மீண்டும் வாடிகன் திரும்பினார். இந்நிலையில், தற்போது 88 வயதான போப் பிரான்சிஸ், வாட்டிகன் இல்லத்தில் காலமானார்.
அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த போப் பிரான்சிஸ், கடந்த 2013 ஆம் ஆண்டு போப் ஆக பொறுப்பேற்று, 12 ஆண்டுகள் இந்த பதவி வகித்தார்.
போப் பிரான்சிஸ்ஸின் மறைவு, உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |