கத்தோலிக்க திருச்சபையின் கடைசித் தலைவராக போப் பிரான்சிஸ்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் தீர்க்கதரிசனம்
போப் பிரான்சிஸ் மறைவு ஒரு புதிய ஆன்மீகப் புரட்சியை உருவாக்கும் என்றும் கத்தோலிக்க திருச்சபையின் தற்போதைய வடிவத்திற்கான அதன் முடிவின் தொடக்கம் என்றும் வாழும் நாஸ்ட்ராடாமஸ் தமது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
திருத்தந்தை பதவி கடைசி
வாழும் நாஸ்ட்ராடாமஸ் என அறியப்படும் பிரேசில் நாட்டவரான அதோஸ் சலோமே கத்தோலிக்க திருச்சபை குறித்து அதிரவைக்கும் கணிப்பு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில் கத்தோலிக்க திருச்சபை மூன்றாக பிளவுபடும் என்றும், ரோம் நகரம் இரண்டு மிக மோசமான இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை பொதுமக்கள் பார்வையில் இருந்து மறைக்கப்பட்ட, கிறிஸ்தவ மதத்தின் தோற்றத்திற்குப் புதிய அர்த்தங்களைத் தரும் பண்டைய நூல்கள் வெளிச்சத்திற்கு வரும் என்றும் அவர் கணித்துள்ளார்.
நாம் கற்பனை செய்ய முடியாத அளவு ஆன்மீகப் புரட்சியின் விளிம்பில் இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ள வாழும் நாஸ்ட்ராடாமஸ், பாரம்பரிய திருச்சபை மாதிரியின் கீழ் போப் பிரான்சிஸின் திருத்தந்தை பதவி என்பது உண்மையில் கடைசியாக இருக்கலாம் என்றார்.
மட்டுமின்றி புதிய போப் யார் என்பதை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் நவீன வரலாற்றில் மிக நீளமானதாக இருக்கும் என்றார். 12 ஆண்டுகளுக்கு முன்னர் போப் பிரான்சிஸ் தெரிவு செய்யப்பட வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், தற்போது ஏழு நாட்களுக்கும் மேலான தீவிர ஆலோசனைகள் தேவைப்படும் என்றும் வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.
செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா
இது மட்டுமின்றி, இயற்கை பேரிடர் மட்டுமின்றி, அசாதாரண புயல்கள், பாரிய தொழில்நுட்ப தோல்விகள் மற்றும் விவரிக்க முடியாத இயற்கை நிகழ்வுகளால் ரோம் குறிவைக்கப்படும் என்றார்.
கத்தோலிக்க திருச்சபையானது பாரம்பரியவாதிகள், சீர்திருத்தவாதிகள் மற்றும் மறைபொருள் சார்ந்த கூட்டத்தால் பிளவுபடும் என்றும், புதிய போப் என யார் தெரிவானபோதும் 2027ல் கத்தோலிக்க திருச்சபை மூன்றாக பிளவுபடுவது உறுதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் மூன்றாவது பிரிவினரால் பல ரகசியங்கள் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டுவரப்படும் என்றும் அவர் கணித்துள்ளார். 2030 ஆம் ஆண்டுக்குள் கத்தோலிக்க திருச்சபையால் பெண்கள் பாதிரியார்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும், ரோம் பூகம்பம் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படலாம் என்றும் அவர் கணித்துள்ளார்.
டைபர் நதியின் வரலாறு காணாத வெள்ளம் ரோம் நகரத்தைப் பாதிக்கும் மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவை சேதப்படுத்தும் என்றும் அவர் கணித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |