மருத்துவமனையிலிருந்து புடினுடன் தொலைபேசியில் பேசிய போப் லியோ
Pope Leo calls Putin while recovering from cancer surgery: புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் லியோ, புடினை தொலைபேசியில் அழைத்துப் பேசியுள்ளார்.
புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் லியோ, சிகிச்சைக்குப் பின், ரஷ்ய ஜனாதிபதியான புடினை தொலைபேசியில் அழைத்துப் பேசியதாக வாட்டிகன் தெரிவித்துள்ளது.
புடினை தொலைபேசியில் அழைத்துப் பேசிய போப் லியோ

ரஷ்ய ஆக்கிரமிப்பு உக்ரைன் நகரமான Oleshky தொடர்பில் பேசவே போப் லியோ புடினை அழைத்துள்ளார்.
Oleshky நகரில் நிலவும் மனிதாபிமான நிலை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய போப் லியோ, அந்நகருக்குள் முதலுதவி மற்றும் உணவுப்பொருட்கள் செல்வதற்கும், பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கும் வசதியாக போர் நிறுத்தம் செய்யுமாறு கேட்டுக்கொண்டதாக வாட்டிகன் வட்டாரம் தெரிவித்துள்ளது.
போப் லியோ, நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், செவ்வாயன்று, அவரது வலது நுரையீரலின் ஒரு பகுதி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.