டிரம்புடன் விவாதம் நடத்த விருப்பம் இல்லை: போப் லியோ கருத்து
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் விவாதம் நடத்த விருப்பமில்லை என்று போப் ஆண்டவர் லியோ தெரிவித்துள்ளார்.
டிரம்ப் குறித்து லியோ கருத்து
போப் ஆண்டவர் லியோ 11 நாள் சுற்றுப்பயணமாக ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ளார்.
இந்த பயணத்தில் அங்கு நிலவும் மோதல்களை தீர்க்க தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் போப் லியோ கேமரூனில் இருந்து அங்கோலா செல்லும் வழியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

இதற்கிடையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் பொது விவாதம் நடத்த தனக்கு சிறிதும் விருப்பமில்லை என்று போப் ஆண்டவர் லியோ தெரிவித்துள்ளார்.
தான் ஒரு அரசியல் தலைவர் அல்ல, நான் ஒரு ஆன்மீகத் தலைவர் தான் என்று போப் லியோ இதன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும் டிரம்ப் தன்னுடைய கருத்துகளை விமர்சித்து இருந்த போதிலும், தொடர்ந்து அமைதியை மட்டுமே போதிப்பேன் என்று போப் லியோ தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |