அரசாங்கத்தை விமர்சித்ததற்காக பிரபல நடிகை கைது
பங்களாதேஷின் இடைக்கால அரசை சமூக ஊடகத்தில் தொடர்ந்து விமர்சித்துவந்த பிரபல நடிகை ஒருவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நடிகை
நடிகை, இயக்குநர், நடனக்கலைஞர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகத்திறன் கொண்டவர், மெஹர் அஃப்ரோஸ் ஷாவோன் (Meher Afroz Shaon).
தேசிய விருது பெற்ற நடிகையான மெஹர், பங்களாதேஷின் இடைக்கால அரசை சமூக ஊடகத்தில் தொடர்ந்து விமர்சித்துவந்தார்.
இந்நிலையில், மெஹர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
எங்களுக்குக் கிடைத்த சில தகவல்களின் பேரில் மெஹர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று கூறிய கூடுதல் ஆணையரான Rezaul Karim Mollick, மெஹர் விசாரணைக்காக கொண்டுசெல்லப்பட்டதாக மட்டும் கூறினார்.
மெஹர், புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் மற்றும் இயக்குநரான Humayun Ahmedஇன் மனைவி ஆவார்.
அத்துடன், மெஹரின் பெற்றோரும், நாட்டை விட்டு வெளியேறிய பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியைச் சார்ந்த அரசியல்வாதிகள் ஆவர்.
ஆக, மெஹரும் ஷேக் ஹசீனாவுக்கு நெருக்கமானவர் என்பதால், அவரது கைது அரசியல் உள் நோக்கம் கொண்டது என கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |