நீச்சல் குளங்களில் வெளிநாட்டவர்கள் குளிக்கத் தடை: சர்ச்சையை உருவாக்கியுள்ள சுவிஸ் அறிவிப்பு
சுவிஸ் மாகாணமொன்றில் நீச்சல் குளங்களில் வெளிநாட்டவர்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள விடயம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
வெளிநாட்டவர்கள் குளிக்கத் தடை
சுவிட்சர்லாந்தின் ஜூரா மாகாணத்திலுள்ள நீச்சல் குளங்களில் வெளிநாட்டவர்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விடயம் என்னவென்றால், ஜூரா மாகாணம் பிரான்ஸ் எல்லையில் அமைந்துள்ளது.

எல்லையிலிருந்து சுமார் 15 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள Porrentruy முனிசிபாலிட்டியில் ஒரு பொது நீச்சல் குளம் உள்ளது.
எல்லை தாண்டி அங்கு வரும் பிரான்ஸ் நாட்டவர்கள், உள்ளூர் மக்களுக்கு தொல்லை கொடுப்பதாகவும், மிரட்டல் மற்றும் விதி மீறல்களில் ஈடுபடுவதாகவும் புகார்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
இந்த விடயம் உள்ளூர் நாடாளுமன்றம் வரை சென்ற நிலையில், நீச்சல் குளங்களில் வெளிநாட்டவர்கள் குளிக்கத் தடை விதிக்க நாடாளுமன்றம் ஒப்புதலளித்துள்ளது.
ஆக, மே மாதம் 23ஆம் திகதி நீச்சல் குளம் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், சுவிட்சர்லாந்தில் வாழாத மற்றும் பணி செய்யாத வெளிநாட்டவர்கள் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |