அமெரிக்காவிற்கு ஆயுத ஏற்றுமதியை நிறுத்திய சுவிட்சர்லாந்து
அமெரிக்காவிற்கு ஆயுத ஏற்றுமதியை சுவிட்சர்லாந்து நிறுத்தியது.
சுவிட்சர்லாந்து அரசு, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காரணமாக, அமெரிக்காவிற்கு ஆயுத ஏற்றுமதி செய்யும் உரிமங்களை வழங்க மறுத்துள்ளது.
வெள்ளிக்கிழமை (மார்ச் 20) வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், “ஈரான் போரில் நேரடியாக ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு ஆயுதப் பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்க முடியாது” என தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து தனது நடுநிலை சட்டம் (Neutrality Law) அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளது.

கடந்த வாரம், சுவிஸ் வான்வெளியில் பறக்க அமெரிக்கா கேட்ட 5 கோரிக்கைகளில் 2 தாக்குதல் விமான கோரிக்கைகளுக்கு மறுப்பு தெரிவித்த சுவிட்சர்லாந்து, மூன்றுவிமான கோரிக்கைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கியது.
2003-ஆம் ஆண்டு அமெரிக்கா ஈராக் மீது நடத்திய படையெடுப்பின் போது, சுவிட்சர்லாந்து இதேபோன்ற தடை விதித்தது. பின்னர் அந்தத் தடை நீக்கப்பட்டது.
ஆனால், 2026 பிப்ரவரி 28 முதல் தொடங்கிய அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களின் பின்னர், புதிய உரிமங்கள் வழங்கப்படவில்லை.
சுவிஸ் அரசு, “அமெரிக்காவவிற்கு ஆயுத ஏற்றுமதி உரிமம் தற்போது வழங்க முடியாது” எனத் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இஸ்ரேலுக்கும் பல ஆண்டுகளாக எந்த உரிமமும் வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து நிபுணர்கள் குழு, நிலைமையை தொடர்ந்து மதிப்பீடு செய்து, நடுநிலை சட்டத்தின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு சவாலாக இருக்கும் நிலையில், சுவிட்சர்லாந்து தனது “நடுநிலை” நிலைப்பாட்டை உறுதியாகக் காக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Switzerland arms export ban, US Iran war neutrality, Swiss neutrality law weapons #Switzerland #IranWar #US