இந்தியாவில் புதிய Porsche 911 Turbo S அறிமுகம் - விலை ரூ.3.8 கோடி
உலகின் பிரபலமான ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பாளரான Porsche, தனது new-gen 992.2 911 Turbo S காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய Porsche 911 Turbo S விலை ரூ.3.8 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மொடல், 3.6 லிட்டர் flat-six turbocharged hybrid powertrain என்ஜின் கொண்டு இயங்குகிறது.
GTS மொடலைப் போலவே ஹைப்ரிட் பவர்ட்ரெய்ன் கொண்டிருந்தாலும், கூடுதலாக e-turbocharger இணைக்கப்பட்டதால், கார் 711 bhp சக்தி மற்றும் 800 Nm டார்க் வழங்குகிறது. முந்தைய Turbo S மொடலை விட 60 bhp அதிக சக்தி கொண்டதாகும்.

2.5 விநாடிகளில் 0-100 kmph வேகத்தையும், 8.4 விநாடிகளில் 0-200 kmph வேகத்தையும் எட்டும் சக்தி கொண்டது. மேலும், இதன் அதிகபட்ச வேகம் 322 kmph என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கார், புகழ்பெற்ற Nurburgring Nordschleife பந்தயப்பாதையில் 7:03.92 நிமிடங்கள் என்ற சாதனையைப் பதிவு செய்துள்ளது.
வெளிப்புற வடிவமைப்பில், பின்புற சக்கர வளைவுகளின் அருகே ஏர் வென்ட், சிறிய ஸ்பாய்லர், பெரிய கார்பன் செராமிக் டிஸ்க் பிரேக்குகள் (420mm/410mm), டைட்டானியம் மஃப்லர் கொண்ட ஸ்போர்ட்ஸ் எக்ஸாஸ்ட், 21-இன்ச் வீல்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
உள்ளமைப்பில், புதிய தலைமுறை டிஜிட்டல் வசதிகள் மற்றும் புதிய creature comforts வழங்கப்பட்டுள்ளன. மேலும், Porsche Exclusive Manufaktur திட்டத்தின் கீழ் தனிப்பட்ட முறையில் கார் வடிவமைப்பை மாற்றிக்கொள்ளும் வசதியும் உள்ளது.
இந்தியாவில், புதிய 911 Turbo S கார் Coupe வடிவில் மட்டுமே கிடைக்கிறது. விநியோகம் அடுத்த ஆண்டு தொடங்கும் என Porsche அறிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Porsche 911 Turbo S India launch, Porsche 911 Turbo S price Rs.3.8 crore, Porsche 992.2 Turbo S specs, Porsche Turbo S top speed 322 kmph, Porsche 911 Turbo S hybrid engine, Porsche Exclusive Manufaktur India, Porsche 911 Turbo S Nürburgring lap, Porsche sports car India 2025, Porsche 911 Turbo S features, Porsche 911 Turbo S deliveries India