தடுமாறி விழுந்த ரொனால்டோ..கோல் அடித்த சில்வா..போர்த்துக்கல் அபார வெற்றி
யூரோ 2024 போட்டியில் போர்த்துக்கல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் துருக்கியே அணியை வீழ்த்தியது.
தடுமாறி விழுந்த ரொனால்டோ
Signal Iduna Park மைதானத்தில் நடந்த போட்டியில் போர்த்துக்கல் மற்றும் துருக்கியே அணிகள் மோதின.
ஆட்டத்தின் 6வது நிமிடத்திலேயே துருக்கியே அணிக்கு கோல் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் போர்த்துக்கல் வீரர்கள் துரிதமாக செயல்பட்டு கோல் முயற்சியை தடுத்தனர்.
?#EURO2024 | #TURPOR pic.twitter.com/Mx0pE2OXHa
— UEFA EURO 2024 (@EURO2024) June 22, 2024
21வது நிமிடத்தில் நுனோ மெண்டெஸ் பந்தை cut-back pass செய்து Boxயில் தள்ளியபோது, நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தடுமாறி கீழே விழுந்தார். எனினும் விரைந்த வந்த பெர்னார்டோ சில்வா (Bernardo Silva) அபாரமாக கோல் அடித்தார்.
Own Goal
அதன் பின்னர் 28வது நிமிடத்தில் துருக்கியே வீரர் சமெத் அகாய்டின் (Samet Akaydin) Pass செய்த பந்தை கோல் கீப்பர் அல்டய் (Altay) கவனிக்க தவறியதால் அது Own Goal ஆக மாறியது.
அதனைத் தொடர்ந்து 55வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) சுலபமாக Pass செய்த பந்தை புருனோ பெர்னாண்டஸ் வலைக்குள் தள்ளினார்.
இதன்மூலம் போர்த்துக்கல் (Portugal) அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
Portugal through to the round of 16 as Group F winners ???#EURO2024 | #TURPOR pic.twitter.com/1or9rJ7Icq
— UEFA EURO 2024 (@EURO2024) June 22, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |