FIFA உலகக்கோப்பையில் தோல்வி., போர்ச்சுக்கல் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகல்
கத்தார் 2022 FIFA உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடரில் தோல்வியடைந்தையை அடுத்து, போர்ச்சுக்கல் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து பெர்னாண்டோ சான்டோஸ் விலகியுள்ளார்.
போர்ச்சுகல் பயிற்சியாளராக எட்டு ஆண்டுகள் பணியில் இருந்த பெர்னாண்டோ சாண்டோஸ் (68), காலிறுதியில் போர்ச்சுகல் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய ஐந்து நாட்களுக்குப் பிறகு இந்த முடிவை எடுத்துள்ளார். இதனை, போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு வியாழக்கிழமை அறிவித்தது.
தென் கொரியாவிற்கு எதிரான காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில், நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை வெளியே அமரவைத்து போர்ச்சுகல் அணியை ஆடவைத்தார் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ்.
©AFP/Getty Images
இதனால், பெரும் ஏமாற்றத்தை சந்தித்த ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். குறிப்பாக மொராக்கோ அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் பென்ச்சில் உட்கார வைக்கப்பட்ட ரொனால்டோ, ஆட்டத்தின் 45-வது நிமிடத்தில்தான் களத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டார்.
சனிக்கிழமையன்று நடந்த உலகக் கோப்பை காலிறுதியில் மொராக்கோவிடம் 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் கத்தாரை விட்டு வெளியேறியது.
Mirror.uk
சாண்டோஸ் போர்ச்சுகலை 2016 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பட்டத்திற்கு அழைத்துச் சென்றார். போர்ச்சுகலுக்கு அது முதல் சர்வதேச கோப்பையாக இருந்தது. மேலும் 2019-லும் UEFA நேஷன்ஸ் லீக் பட்டத்தை வென்று கொடுத்தார்.