2026 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற போர்ச்சுகல்: 6வது முறையாக களம் காணும் ரொனால்டோ
2026 ஆம் ஆண்டிற்கான உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு போர்ச்சுகல் அணி தகுதி பெற்றுள்ளது.
2026 உலகக் கோப்பை கால்பந்து
2026 ஆம் ஆண்டுக்கான FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டியை கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று வட அமெரிக்க நாடுகள் இணைந்து நடத்த உள்ளன.
இதற்கான தகுதி சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தகுதிச் சுற்று போட்டியில் போர்ச்சுகல் மற்றும் அர்மேனியா அணிகள் மோதிய நிலையில், 1-9 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
கேப்டன் மற்றும் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ இல்லாமலே இந்த போட்டியில் போர்ச்சுகல் வெற்றி பெற்று இருப்பதுடன், 2026 ம் ஆண்டுக்கான FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.
இதன் மூலம் 6வது முறையாக உலகக் கோப்பை தொடரில் போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ பங்கேற்க உள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |