பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதில் பிரித்தானியா, பிரான்சுடன் இணையும் மற்றோரு நாடு
பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதில் பிரித்தானியா மற்றும் பிரான்சுடன் மற்றோரு ஐரோப்பிய நாடு இணைகிறது.
பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து, போர்த்துகீசியம் வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக பாலஸ்தீனத்தை ஒரு சுயாதீன அரசாக அங்கீகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இது, கடந்த சில மாதங்களாக தொடரும் காசா போர் மற்றும் மனிதாபிமான நெருக்கடியை மையமாகக் கொண்டு ஐரோப்பிய நாடுகளின் நிலைப்பாட்டில் ஒரு முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
போர்த்துகீசிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், "பாலஸ்தீனத்தின் நிலைமை மிகவும் கவலையளிக்கிறது. இஸ்ரேல் தொடர்ந்து பாலஸ்தீன பகுதிகளை இணைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகிறது. இதை எதிர்த்து, நாங்கள் பாலஸ்தீனத்தை அரசு என அங்கீகரிக்க முடிவு செய்துள்ளோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்த்துகீசிய பிரதமர் லூயிஸ் மான்டெனெக்ரோ, ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்துடன் ஆலோசனை நடத்தி இந்த முடிவை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்குமுன் ஸ்பெயின், அயர்லாந்து, நோர்வே அகத்திய நாடுகள் 2024-ல் பாலஸ்தீனத்தை அங்கீகரித்தன.
தற்போது, அவுஸ்திரேலியா, கனடா, பெலிஜியம், லக்ஸம்பர்க், மால்டா, சான் மரினோ உள்ளிட்ட நாடுகளும் அங்கீகரிக்கத் திட்டமிட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Portugal recognise Palestine, Israel palestine issue, Palestine recognition