பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம்: போர்த்துகல் நிர்வாகம் அவசர எச்சரிக்கை
கனமழை, பெருவெள்ளம் காரணமாக போர்த்துகல் நாட்டின் பல பகுதிகள் சேதமடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது
போர்த்துகலில் கனமழை, பெருவெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ள சாலைகள் மற்றும் தெருக்களை சுத்தப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் ராணுவத்தை களமிறக்கியுள்ளது.
@reuters
லிஸ்பன் நகர நிர்வாகம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், பொதுமக்கள் குடியிருப்புகளில் தங்கியிருந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் போர்த்துகல் முழுவதும் 1,500 பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. தெருக்களில் பெருவெள்ளம், வெள்ளத்தில் மூழ்கியுள்ள சுரங்கப்பாதைகள், ரயில் நிலையங்கள், அங்காடிகள் என அதிகாரிகள் பட்டியலிட்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே தூய்மைப் பணிகளுக்கு உதவும் பொருட்டு ராணுவத்தின் உதவியை நாடியுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். லிஸ்பன் மாவட்டத்தின் சில பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகள் மூடப்பட்டு, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
@reuters
வெள்ளப்பெருக்கு ஏற்படலாம்
இதனிடையே, Tagus ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எந்த நேரமும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நகர பேருந்து சேவை மற்றும் டிராம்கள் லிஸ்பன் நகரில் செயல்படாது எனவும் மெட்ரோ சேவையும் முழுமையாக இயங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்த்துகல் மட்டுமின்றி, அண்டை நாடான ஸ்பெயினில் மழையின் பாதிப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
@reuters
இதனிடையே, கனமழையால் ஒரு சாலை இடிந்து விழுந்து பத்து பேர் கொண்ட குழுவை மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.