ரூ. 5 லட்சம் வருவாய்.., மாதம் எவ்வளவு தொகை முதலீடு செய்ய வேண்டும்?
பாதுகாப்பான முதலீட்டையும், நிலையான வருமானத்தையும் விரும்புபவர்களுக்கு அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்கள் உதவியாக உள்ளன.
அரசு ஆதரவுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டங்களில், குறைந்த தொகையில் முதலீடு செய்ய முடியும்.
இந்நிலையில், அஞ்சலகத்தின் தொடர் வைப்புத் திட்டத்தில் (RD) முதலீடு செய்வது பாதுகாப்பாக கருதப்படுகிறது.

தற்போது 6.7 சதவீத வட்டி வழங்கப்படுகின்ற தொடர் வைப்புத் திட்டத்தின் முதிர்வுக் காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
தினமும் சிறுகச் சிறுக பணத்தைச் சேமித்து, அதை மாதந்தோறும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
இந்த திட்டத்தில் தினமும் ரூ.200 சேமித்தால், 30 நாட்களில் ரூ.6,000 சேமிக்க முடியும்.
மாதம் ரூ.6,000 வீதம் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், மொத்தம் ரூ.3.60 லட்சம் முதலீடு செய்யப்படும்.
6.7 சதவீத வட்டி அடிப்படையில், முதிர்வு காலத்தில் சுமார் ரூ.4.28 லட்சம் கிடைக்கும். இதில் சுமார் ரூ.68,000 வட்டியாக கிடைக்கும்.
அஞ்சலக RD திட்டத்தில் குறைந்தபட்சமாக மாதம் ரூ.100 முதலீடு செய்யலாம், முதலீட்டு தொகைக்கு அதிகபட்ச வரம்பு இல்லை.
முதலீடு செய்வதற்கு முன்பு திட்டத்தின் வட்டி விகிதம், கால அளவு மற்றும் விதிமுறைகளை தெரிந்துகொள்வது அவசியம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |