அதிக வட்டியை தரும் Post Office திட்டங்கள்.., முழு விவரங்கள் உள்ளே
சிறிய முதலீட்டில் அதிகமான லாபத்தை பெறும் அஞ்சல் அலுவலகத் திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நீங்கள் பாதுகாப்பான முதலீட்டை விரும்பினால் வங்கிகளைத் தவிர தபால் நிலையத்திலும் பல திட்டங்களில் இணையலாம். குறுகிய கால முதலீடு முதல் நீண்ட கால முதலீடு வரை பல திட்டங்களை பெறலாம்.
7.5% முதல் 8.2% வரை வட்டி அளிக்கப்படும் அஞ்சல் அலுவலகத் திட்டங்களைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள். பாதுகாப்பான முதலீட்டில் பணம் சம்பாதிக்க விரும்பினால், இந்தத் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
தபால் அலுவலக எஃப்.டி (Post Office FD)
1 வருடம், 2 வருடம், 3 வருடம் மற்றும் 5 வருடம் கொண்ட அஞ்சலக நிலையான வைப்புத் திட்டங்கள் ((Post Office FD) உள்ளது.
Post Office Fixed Deposit Interest Rates ஆனது 1 வருடத்திற்கு 6.90%, 2 வருடத்திற்கு 7.00%, 3 வருடத்திற்கு 7.10% எனவும், 5 வருடத்திற்கு 7.50% எனவும் உள்ளது.
மகிளா சம்மன் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் ( Mahila Samman Savings Certificate scheme)
பெண்களுக்காக பிரத்யேகமாக மகிளா சம்மன் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
தபால் அலுவலக MSSC திட்டத்தின் விண்ணப்பதாரர்கள் இந்த திட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம். இந்த திட்டமானது 7.5 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
கிசான் விகாஸ் பத்ரா (Kisan Vikas Patra)
நீண்ட காலத்திற்கு பணத்தை முதலீடு செய்ய முடிந்தால், நீங்கள் கிசான் விகாஸ் பத்ராவில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டம் உங்கள் பணத்தை 115 மாதங்களில் இரட்டிப்பாக்குகிறது. இந்தத் திட்டம் 7.5% வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.
தேசிய சேமிப்புச் சான்றிதழ் (National Savings Certificate)
தபால் நிலையத்தில் தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் என்ற திட்டம் உள்ளது. இந்த திட்டத்திலும் 5 ஆண்டுகளுக்கு பணம் முதலீடு செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் 7.7% வட்டி வழங்கப்படுகிறது.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme)
மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டியின் பலனை வழங்குவதற்காக தபால் நிலையத்தில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தை அரசு நடத்துகிறது.
இந்தத் திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் 8.2% வட்டி வழங்கப்படுகிறது.
சுகன்யா சம்ரித்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana)
பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மத்திய அரசு சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana - SSY) அல்லது செல்வமகள் சேமிப்பு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இதில், ஒருவர் 15 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். இந்த திட்டம் 21 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும். இதில், ஆண்டுக்கு ரூ.250 முதல் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். தற்போது இந்த திட்டத்திற்கும் 8.2% வட்டி வழங்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |