ரூ.70 லட்சம் சம்பாதிக்கும் மாப்பிள்ளையை விட T20 கிரிக்கெட்டே முக்கியம்! வியக்க வைத்த மணமகள் தந்தை
இந்தியா - இங்கிலாந்து டி20 அரையிறுதி போட்டியை காரணமாக வைத்து மணமகள் தந்தை செய்த செயல் ஆச்சரியமடைய வைத்துள்ளது.
கிரிக்கெட்டே முக்கியம்
இந்தியர்கள் பலரும் கிரிக்கெட் பார்ப்பதற்காக உணவு, உறக்கத்தை தள்ளிப்போடவும் தயங்கமாட்டார்கள். அதிலும், இந்தியா ஆடும் போட்டி என்றால் கூடுதலாக ஆர்வமாக இருப்பார்கள். அதில் சில சுவாரஸ்ய சம்பவங்கள் நடப்பது உண்டு.
அந்தவகையில், தனது மகளுக்கு வரன் தேடும் தந்தை ஒருவர் நிகழ்த்திய சுவாரசிய நிகழ்வொன்று இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.
ராகுல் என்னும் இளைஞர் ஒருவர் ஆண்டுக்கு ரூ.70 லட்சம் சம்பளம் பெற்று வருகிறார். இவர், திருமணம் செய்ய மணமகளை தேடி வருகிறார்.
அப்போது ஒன்லைன் வரன் பார்க்கும் தளம் ஒன்றில் கண்ணில்பட்ட மணமகள் ஒருவரால் ஈர்க்கப்பட்டார். பின்னர், மணமகளின் வீட்டை தொடர்பு கொள்வதற்காக ஒன்லைன் தளத்தில் சேட்டிங் தளத்தை பயன்படுத்தியுள்ளார்.
இதையடுத்து அதில் தன்னை பற்றி அறிமுகம் செய்து கொண்டார். இவர், தனக்கு மாதம் ரூ.5.8 லட்சம் சம்பளம் கிடைப்பதால் வரனை தவிர்க்காமல் தன்னை உடனே தொடர்பு கொள்வார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆனால், அப்போது தான் வேறு மாதிரியான சம்பவம் நடைபெற்றது. அதாவது, மணமகள் பிரியங்காவின் தந்தை தன்னை அறிமுகம் செய்துகொண்டதோடு, ’கிரிக்கெட் மேட்ச் போய்க்கொண்டிருக்கிறது. மேட்ச் முடிந்ததும் பேசலாமே’ என்று உரையாடலை துண்டித்துள்ளார்.
இந்த சாட்டிங்கை ராகுலின் உறவினர் ஒருவர் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |