ஹிஸ்புல்லா புதிய தலைவரும் படுகொலை... இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக சந்தேகம்
ஹிஸ்புல்லா படைகளின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்ட நிலையில், புதிய தலைவாரக பொறுப்புக்கு வரவேண்டியவர் வெள்ளிக்கிழமை முதல் தொடர்பில் இல்லை என லெபனான் பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
தொடர்புகொள்ள முடியவில்லை
இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதலை அடுத்தே அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் லெபனான் தரப்பில் கூறப்படுகிறது. ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா மீது தொடர் தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில் ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராக பொறுப்புக்கு வரவேண்டிய Hashem Safieddine பதுங்கியிருந்த பகுதியில் வியாழக்கிழமை இஸ்ரேல் தாக்குதல் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தெற்கு பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா படைகள் அதிகமாக காணப்படும் Dahiyeh பகுதி மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை முன்னெடுத்து வந்துள்ளது. ஆனால் ஹாஷிம் சஃபிதீன் தொடர்பில் ஹிஸ்புல்லா படைகள் கருத்தேதும் தெரிவிக்க மறுத்துள்ளது.
30 ஆண்டுகள் ஹிஸ்புல்லா படைகளின் தலைவராக இருந்த நஸ்ரல்லா கொல்லப்பட்டதும், தற்போது புதிய தலைவராக பொறுப்புக்கு வரவேண்டியவர் தொடர்பில் இல்லாததும் ஹிஸ்புல்லா படைகளுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
2000 ஹிஸ்புல்லா முகாம்கள்
கடந்த ஓராண்டு காலமாகவே ஹிஸ்புல்லா படைகள் ஆதிக்கம் செலுத்திவரும் லெபனான் பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. ஆனால் கடந்த சில வாரங்களாகவே தாக்குதலை அதிகரிக்க செய்துள்ளது.
பெய்ரூட்டின் புறநகர்ப் பகுதிகளை குண்டுகளால் தாக்கியது மட்டுமின்றி இஸ்ரேலிய துருப்புக்கள் தெற்கில் தீவிர ராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்தன.
இதுவரை 440 ஹிஸ்புல்லா வீரர்களை கொன்றுள்ளதாகவும், 2000 ஹிஸ்புல்லா முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹிஸ்புல்லா தரப்பில் இதுவரை இந்த தகவல்களை உறுதி செய்யவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |