டாலருக்கு எதிரான பிரித்தானிய பவுண்ட் வர்த்தகம்: தொடரும் 37 ஆண்டு கால வீழ்ச்சி!
பவுண்ட் வர்த்தக மதிப்பு $1.14க்கு கீழ் குறைந்துள்ளது.
1985 ஆம் ஆண்டு முதல் கீழ்நோக்கிய போக்கைத் தொடர்கிறது.
பிரித்தானிய பவுண்ட். அமெரிக்க டாலருக்கு எதிரான பிரித்தானிய பவுண்ட் நாணயத்தின் வர்த்தக மதிப்பு சரிவை சந்தித்துள்ளது.
பிரித்தானியா நாணயமான பவுண்ட், அமெரிக்க நாணயமான டாலருக்கு எதிராக வரத்தக வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
பிரித்தானிய நாணயத்தின் இந்த வீழ்ச்சியானது கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வருவதாகவும், இது 37 வருடத்தின் குறைந்த நிலையை எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
EPA
சமீபத்திய பொருளாதார தரவுகளின் படி பிரித்தானியாவில் பணவீக்கமானது குறைந்து வருகிறது, இருப்பினும் அவை வரலாற்று ரீதியாக உயர்வான இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியால் நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையை அடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஆறு நாடுகளுக்கு மறுக்கப்பட்ட அழைப்பு: வெளிவந்துள்ள முழு பட்டியல்!
இன்று வெளியான ஆகஸ்ட் மாதாந்திர சில்லறை விற்பனை 1.6 சதவிகிதம் வீழ்ச்சியைக் காட்டியது, டாலருடன் ஒப்பிடும் போது பவுண்ட் 0.81% இழந்து 1.13746க்கு விற்கப்பட்டது.
டாலருக்கு எதிரான பிரித்தானிய பவுண்ட் வர்த்தகம்: தொடரும் 37 ஆண்டு கால கீழ்நோக்கிய போக்கு!