பந்தில் பெட்ரோலை ஊற்றி தீவைத்து சிறுவன் மீது வீச்சு: வாழ்நாளுக்கும் மறையாத வடுக்களுடன் பாதிப்பு
அமெரிக்காவில், மற்றவர்களை அடிக்கடி வம்புக்கிழுக்கும் சிறுவன் ஒருவன், மற்றொரு சிறுவன் மீது எரியும் பந்து ஒன்றை வீசியதில், இந்த சிறுவனுக்கு முகம் மற்றும் கால்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
Bridgeport என்ற இடத்தில் வாழும் Dominick Krankall (6) என்ற சிறுவன் தன் வீட்டின் பின்பக்கத்தில் விளையாடிக்கொண்டிருக்கும்போது, பக்கத்து வீட்டிலுள்ள ஒரு 8 வயது சிறுவன் அவனை ஆசை காட்டி தன்னிடம் வரவழைத்துள்ளான்.
Dominick அவனருகில் செல்லவும், அந்த சிறுவன் ஒரு டென்னிஸ் பந்தில் பெட்ரோலை ஊற்றி, தீவைத்துக் கொளுத்தி, அதை Dominick முகத்தில் வீசியிருக்கிறான்.
Dominick, அம்மா, அவர்கள் என் மீது தீவைத்து கொளுத்திவிட்டார்கள் என்று கத்திக்கொண்டே தன் வீட்டுக்கு ஓடியிருக்கிறான்.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட Dominickக்கு, முகம் மற்றும் கால்களில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
அந்த சிறுவன் Dominickஐ இது போல் வம்புக்கிழுத்து மருத்துவமனைக்கு அனுப்புவது இது முதல் முறையல்ல என அவனது பெற்றோர் தெரிவித்துள்ளார்கள்.
அந்த சிறுவன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், பாதிக்கப்பட்ட Dominick, வாழ்நாள் முழுவதும் அந்த தீக்காயங்களால் ஏற்பட்ட வடுக்களுடன்தான் வாழ்ந்தாகவேண்டும்.