சென்னையை நோக்கி வந்த விமானத்தில் பவர்பேங்க் வெடித்து தீ விபத்து
power bank caught fire in delhi to chennai indigo flight: டெல்லியிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் பவர்பேங்க் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னையை நோக்கி வந்த விமானத்தில் தீ விபத்து
6E 6115 என்ற இண்டிகோ விமானம் நேற்று டெல்லி ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை நோக்கி புறப்பட்டது.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென பயணிகள் உடைமைகளை வைக்கும் மேல்புற பகுதியில் தீப்பற்றி எரிந்தது.

தீ பற்றியதை கண்டு, அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக தங்களது உடமைகளை அப்புறப்படுத்தினர். விமான பணியாளர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்.
An IndiGo flight operating from Delhi to Chennai reportedly made an emergency landing at Rajiv Gandhi International Airport in Shamshabad after a passenger's 𝐩𝐨𝐰𝐞𝐫 𝐛𝐚𝐧𝐤 caught fire on board. The incident involved flight 6E6115, according to the sources. #IndiGo #ShamshabadAirport #Powerbank
— Sudhakar Udumula (@sudhakarudumula) October 11, 2026
விமான பயணி ஒருவரின் பவர் பேங்க் வெடித்து தீ பற்றியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, விமானம் அவசரமாக ஹைதராபாத் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
பவர் பேங்குகளில் தீ பற்றுவது ஏன்?
பெரும்பாலான பவர் பேங்குகளில் லித்தியம்-அயன் பேட்டரிகளைப் பயன்படுத்தப்படுகிறது. பவர் பேங்கை சார்ஜ் செய்யும்போது அல்லது மற்றொரு சாதனத்தை சார்ஜ் செய்யப் பயன்படுத்தும்போது அது வெப்பத்தை உருவாக்குகிறது.
தரம் குறைந்த பேட்டரிகள், உற்பத்திக் குறைபாடுகள், பௌதீக சேதம் மற்றும் முறையற்ற பயன்பாடு ஆகிய காரணங்களால் அதிக வெப்பமடைந்து தீ விபத்து ஏற்படுகிறது.

பேட்டரிக்குள் குறைபாடு இருந்தால், அது பயன்படுத்தப்படாதபோதும் கூட அதிக வெப்பமடைந்து தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
2025 நவம்பரில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), பயணிகள் விமானப் பயணங்களின் போது பவர் பேங்குகளைப் பயன்படுத்துவதையோ அல்லது சார்ஜ் செய்வதையோ தடைசெய்தது.
இண்டிகோ, ஏர் இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான இந்திய விமான நிறுவனங்கள், பவர் பேங்க்களைச் சோதனையிடப்படும் செக்-இன் பேக்கேஜ்களில் கொண்டு செல்லத் தடை விதித்துள்ளன. சரக்குகளை வைக்கும் அறையில் (Cargo hold) தீப்பிடித்தால் அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.
இருப்பினும், கையில் கொண்டு செல்லும் பைகளில் (Cabin baggage) கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. இங்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் ஊழியர்களால் உடனடியாகக் கண்டறிந்து தீயைக் கட்டுப்படுத்த முடியும்.