உக்ரைன் அணுமின் நிலையத்தின் நிலை குறித்து சர்வதேச அணுசக்தி முகமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையத்தின் நிலை குறித்து சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரஷ்ய படைகள் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரேனின் செர்னோபில் அணுமின் நிலையத்தில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் கதிர்வீச்சு கசியலாம் என உக்ரைன அரசு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், மின் இணைப்பு துண்டிப்பால், அணுமின் நிலையத்தின் பாதுகாப்பில் எந்தவித மோசமான தாக்கமும் ஏற்படவில்லை என IAEA தெரிவித்துள்ளது.
இதுகுறித்து IAEA தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, செர்னோபில் அணுமின் நிலையத்தின் மின் துண்டிப்பு, தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதிசெய்வதில் உள்ள முக்கிய பாதுகாப்பு தூணை மீறுவதாகும்.
இருப்பினும், சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) இந்த விஷயத்தில், அணு மின் நிலையத்தின் பாதுகாப்பில் எந்தவித மோசமான தாக்கத்தையும் காணவில்லை.
செர்னோபில் அணுமின் நிலையத்தில் உள்ள குளிரூட்டும் நீரின் அளவு, மின்சாரம் தேவையில்லாமல் வெப்பத்தை திறம்பட அகற்றுவதற்கு போதுமானது என IAEA குறிப்பிட்டுள்ளது.
IAEA says heat load of spent fuel storage pool and volume of cooling water at #Chornobyl Nuclear Power Plant sufficient for effective heat removal without need for electrical supply. IAEA update from March 3: https://t.co/x5IlduZQOn
— IAEA - International Atomic Energy Agency (@iaeaorg) March 9, 2022