என் அருமைத்தம்பி விஜய்யை எதிர்த்து நிற்பேன் - பவர் ஸ்டார் சீனிவாசன்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தேர்தலில் போட்டியிட்டால் நான் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார்.
பவர்ஸ்டார் சீனிவாசன்
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் திரையுலகில் பிரபலமானவர் பவர்ஸ்டார் சீனிவாசன்.
அதனைத் தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்த இவர் அரசியலில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில், தவெக தலைவர் விஜய்யை எதிர்த்து அரசியல் போட்டியிடுவேன் என கூறியுள்ளார்.
எதிர்த்து நிற்பேன்
அவர், "ஜோசப் விஜய் அவர்களே..நான் உங்களை மிகவும் மதிக்கிறேன். உங்களை கூடப்பிறந்த தம்பி மாதிரிதான் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சியில் சந்தித்தேன். அப்போது மிகவும் அமைதியாக இருந்தவர், இப்போது மேடையில் பயங்கரமாக டயலாக் பேசுகிறார்.
களத்திற்கு வாருங்கள், அப்போதுதான் வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியும். அருமைத்தம்பி விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நிற்பேன். ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு" என்றார்.
மேலும், எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பாளர் கவுன்சிலின் தலைவராக இருந்தபோது அவரை எதிர்த்து நான் நின்றேன். இப்போது அவரது மகன் ஜோசப் விஜய்யை எதிர்த்து நிற்க தயாராக இருக்கிறேன் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |