லொட்டரில் நபர் ஒருவருக்கு அடித்த ரூ.176 கோடி அதிர்ஷ்டம்: வெற்றி எண்களை அறிவித்த பவர் பால் ஜாக்பாட்
அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த நபர் ஒருவருக்கு சுமார் ரூ.176 கோடி லொட்டரி பரிசு கிடைத்துள்ளது.
லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் விற்கப்பட்ட லொட்டரி ஒன்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய லொட்டரி பரிசு தொகை கிடைத்துள்ளது.
புதன்கிழமை நடத்தப்பட்ட ஜாக்பாட்டில் மொத்தம் $1.765 பில்லியன் (அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக ரூ. 176 கோடி) பரிசு தொகை வெற்றியாளருக்கு கிடைத்துள்ளது. இது அமெரிக்க வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய லொட்டரி பரிசு தொகையாகும்.
Getty
புதன்கிழமை இரவு நடத்தப்பட்ட கலிபோர்னியா லொட்டரியில் வெற்றி எண்கள் முறையே 22, 24, 40, 52, 64 மற்றும் சிவப்பு பவர்கள் 10, இவற்றுடன் பொருந்திய ஒரே ஒரு டிக்கெட் Powerball வெற்றியை உறுதிப்படுத்தி உள்ளது.
வெற்றி டிக்கெட்டை வைத்து இருப்பவர் பரிசு தொகையை மொத்தமாகவோ அல்லது ஆண்டுக்கு ஒரு முறை என்ற தவணையில் 30 ஆண்டுகள் இந்த பரிசு தொகையை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
iStock
தவணை முறையில் பரிசு தொகையை பெற வெற்றியாளர் விரும்பவில்லை என்றால் வரி பிடித்தங்கள் போக மீது தொகையை முழுமையாகவும் வெற்றியாளர் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |