லொட்டரியில் மொத்தமாக ரூ.16,590 கோடி பரிசை அள்ளிய ஒருவர்: வெளியான அவர் பெயர்
அமெரிக்க வரலாற்றிலேயே ஒரே ஒருவர் லொட்டரில் 16,590 கோடி பணத்தை பரிசாக அள்ளியுள்ளார். நவம்பர் மாதம் முன்னெடுக்கப்பட்ட அந்த லொட்டரியிலேயே அந்த நபர் சாதனை தொகையை பரிசாக பெற்றுள்ளார்.
சாதனை தொகையை பரிசாக
செவ்வாய்க்கிழமை கலிபோர்னியா லொட்டரி அதிகாரிகள் அந்த நபரின் பெயரை மட்டும் வெளியிட்டுள்ளதுடன், வரிகள் தவிர்த்து அவருக்கு கிடைக்கவிருக்கும் மொத்த தொகை தொடர்பிலும் அறிவித்துள்ளனர்.
சாதனை தொகையை பரிசாக அள்ளியுள்ள அந்த நபரின் பெயர் எட்வின் காஸ்ட்ரோ என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், வேறு தகவல்களை வெளியிட மறுத்துள்ளனர். அவருக்கு சுமார் 997.6 மில்லியன் டொலர் வரிகள் செலுத்தப்பட்ட தொகை கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.
காஸ்ட்ரோ குறித்த லொட்டரி சீட்டை நவம்பர் தொடக்கத்தில் வாங்கியுள்ளார். மேலும் அவர் குறிப்பிட்ட 6 இலக்கங்களும் தெரிவாகியுள்ளது. லொட்டரி வெற்றியாளர்களின் பெயர்கள் மற்றும் குறிப்பிட்ட தகவல்களை பொதுவெளியில் அறிவிக்க வேண்டும் என்பதே கலிபோர்னியா சட்டம்.
நவம்பர் வரையில் கால அவகாசம்
ஆனால் அதிலும் குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டே, அந்த தகவல்களை வெளியிட வேண்டும் எனவும் கூறப்படுகிறது. கடந்த நவம்பர் மாத லொட்டரியில் பரிசை வென்றுள்ளதால், இந்த ஆண்டு நவம்பர் வரையில் அவருக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
உரிய ஆதாரங்களுடன் காஸ்ட்ரோ பணத்தை இந்த ஆண்டுக்குள் எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்.
Powerball லொட்டரி சீட்டுகள் அமெரிக்காவின் 45 மாகாணங்களில் புழக்கத்தில் உள்ளது. தலா 2 டொலர் கட்டணத்தில் சீட்டுகள் விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.