நியூசிலாந்து அருகே சக்திவாய்ந்த பூகம்பம்!
நியூசிலாந்து அருகே உள்ளூர் நேரப்படி இரவு 10 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட தகவலின் படி, நியூசிலாந்து மற்றும் அண்டார்டிகா இடையே பாதியில் அமைந்துள்ள Macquarie தீவு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆகப் பதிவாகியது. இதன் ஆழம் 10 கிலோ மீட்டர் ஆழம் இருக்கும்.
Notable quake, preliminary info: M 6.5 - west of Macquarie Island https://t.co/Zbds2apeKW
— USGS Earthquakes (@USGS_Quakes) December 12, 2021
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அதேசமயம், தற்போது வதை சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.
Macquarie தீவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி எச்சரிக்கை ஏதும் இல்லை என அந்நாட்டு வானிலையியல் மையம் தெரிவித்துள்ளது.
No #tsunami threat to Australia from magnitude 6.6 #earthquake near West of Macquarie Island. Latest advice at https://t.co/Tynv3Zygqi. pic.twitter.com/VS3kfSNLz2
— Bureau of Meteorology, Australia (@BOM_au) December 12, 2021