தலைவர் இருக்கிறார் என்றதும் சீமான் பயந்துவிட்டாரா?
பழ.நெடுமாறன் அவர்களின் பேச்சுகளிலும் செயல்களிலும் பாஜக-வின் தாக்கம் இருப்பதாக நாங்கள் பார்க்கிறோம் என நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சிவ சங்கரன் கருத்து தெரிவித்துள்ளார்.
பழ.நெடுமாறன் கருத்து
தஞ்சாவூரில் திங்கட்கிழமை காலை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ் தேசிய மூத்த தலைவர் பழ. நெடுமாறன், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று வெளியிட்டுள்ள அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தலைவர் பிரபாகரன் மற்றும் அவருடைய குடும்பத்துடன் நான் தொடர்பில் இருக்கிறேன் என்றும், விரைவாக தமிழீழம் தொடர்பான விரிவான அறிக்கையை பிரபாகரன் வெளியிடுவார் என்றும் பழ. நெடுமாறன் அளித்த பேட்டி இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளிடையே-யும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உண்மை தன்மையை பார்க்க வேண்டும்
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சிவ சங்கரன் ஐபிசி தமிழ் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ள கருத்தில், தேசிய தலைவர் பிரபாகரன் குறித்த செய்தி வெளிவருமானால் முதலில் பெரும் மகிழ்ச்சி அடைவது நாம் தமிழர் கட்சி தோழர்களே, ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் விடயத்தில் அதன் உண்மைத்தன்மையை பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழ் தேசிய மூத்த தலைவர் பழ. நெடுமாறன் மீது பல்வேறு தமிழ் அமைப்புகளும், தமிழ் தேசிய தலைவர்களும் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர், இருப்பினும் சமீபத்திய காலங்களில் பழ. நெடுமாறன் அவர்களின் பேச்சுகளிலும் செயல்களிலும் பாஜக-வின் தாக்கம் இருப்பதாக நாங்கள் பார்க்கிறோம் என பல்வேறு கருத்துக்களை நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சிவ சங்கரன் இந்த பேட்டியின் வாயிலாக தெரிவித்துள்ளார்.