தமிழ்நாடு வந்த பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு! ரூ.30 லட்சம் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர்
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றபின் தமிழ்நாடு வந்த பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வெள்ளி பதக்கம் வென்ற பிரக்ஞானந்தா
உலகக்கோப்பை சாம்பியன்ஷிப் செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டில் உள்ள பெக்கு நகரில் நடைபெற்றது. இதன் இறுதி போட்டியில், 5 முறை உலக சாம்பியன்ஷிப் வென்ற நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சன் மற்றும் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் ஆகிய இருவரும் மோதிக்கொண்டனர்.
அப்போது, இறுதி சுற்றின் இரண்டு போட்டிகளும் டிரா ஆனது. பின்னர், கடைசி டைபிரேக்கர் சுற்று பரபரப்பாக நடைபெற்றது. அதில், இந்திய வீரர் பிரக்ஞானந்தா தோல்வியை தழுவி வெள்ளி பதக்கம் வென்றார்.
உலகக்கோப்பை சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் 2 ஆம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவை இந்தியாவே பாராட்டி வருகிறது.
உற்சாக வரவேற்பு
இந்நிலையில், செஸ் உலக கோப்பை தொடரில் வெள்ளி பதக்கம் வென்ற பிரக்ஞானந்தா இன்று சென்னை திரும்பினார்.
அப்போது , விளையாட்டு துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா உள்ளிட்ட அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதுமட்டுமல்லாமல், பிரக்ஞானந்தாவை அழைத்துச் செல்ல மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கிராம நிகழ்ச்சிகள் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தலைமைச் செயலகத்துக்கு பிரக்ஞானந்தா தனது குடும்பத்துடன் சென்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.
மேலும், தமிழக அரசு தரப்பில் ரூ.30 லட்சத்திற்கான காசோலையை பிரக்ஞானந்தாவிடம் முதலமைச்சர் வழங்கினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |