அண்ணாமலை, மோடியை விளாசும் பிரகாஷ் ராஜ்.., விஜயை பற்றி சொன்னது என்ன?
அண்ணாமலை, மோடி மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்து நடிகர் பிரகாஷ் ராஜ் பேட்டி அளித்துள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் அரசியல் தலைவர்களை பற்றி கடுமையாக பேசியுள்ளார்.
அண்ணாமலை குறித்து
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அண்ணாமலை கூறியது குறித்து பிரகாஷ் ராஜிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "அண்ணாமலை முதலில் கோயம்புத்தூரில் எவ்வளவு ஓட்டு வாங்குகிறார் என்று பார்க்கலாம். தங்களை தாங்களே விற்று கொண்டவர்கள் தான் அவர்கள்.
அதனால் அப்படி தான் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அப்படி பேசவில்லை என்றால் தான் ஆச்சரியம். அண்ணாமலையும் தேஜஸ்வி சூர்யாவும் ராமர் சிலையை வைத்து பேசுகிறார்கள்.
தேஜஸ்வி சூர்யாவை எமர்ஜென்சி எக்ஸிட் சூர்யா என்று சொல்வது போல தமிழ்நாட்டிலும் இனி எமர்ஜென்ஸி எக்ஸிட் திறந்துவிடுவார்கள்" என்றார்.
மோடி குறித்து
இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்து பேசிய அவர், "இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி பேசியது தவறு. அவர் தனது மனதில் இருப்பதை வெளிக்காட்டி விட்டார்" என்றார்.
விஜய் குறித்து
நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியில் இணைவீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, "நடிகர் விஜய் இப்போது தான் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவருடைய கொள்கைகள், சிந்தனைகள் என்ன?
மக்களுக்காகவும், கல்விக்காகவும் என்ன சொல்ல போகிறார்? மக்களுக்கு செய்ய வேண்டும் என்று வருகிறார். அவர் சொல்லட்டும். அதன் பின்னர் பார்க்கலாம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |