பாஜகவின் கோட்டையில் வெற்றி பெற்றுள்ள பிரசாந்த் கிஷோர்
பீகாரில் பாஜகவின் கோட்டையாக இருந்த பாங்கிபூர் தொகுதி இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார்.
பிரசாந்த் கிஷோர் வெற்றி
I-PAC எனப்படும் தேர்தல் வியூக நிறுவனத்தை தொடங்கி நடத்தி, இந்திய அரசியலில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளராக வலம் வந்தவர் பிரசாந்த் கிஷோர்.

2021 ஆம் ஆண்டில் தனது தேர்தல் வியூக வகுப்பாளர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், தனது சொந்த மாநிலமான பீகாரில் 2024 ஆம் ஆண்டில் ஜன் சுராஜ் கட்சி என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.
2025 பீகார் சட்டமன்ற தேர்தலில் 238 தொகுதிகளில் போட்டியிட்ட ஜன் சுராஜ் கட்சி ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறாமல் 3.44 சதவீத வாக்குகள் பெற்றது. இந்த தேர்தலில் கட்சியின் தலைவரான பிரசாந்த் கிஷோர் போட்டியிடவில்லை.
இதில், NDA கூட்டணி 204 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜகவின் சாம்ராட் சௌத்ரி பீகார் முதலமைச்சரானார்.
பாங்கிபூர் தொகுதியில் வெற்றி பெற்ற நிதின் நபின் ராஜ்யசபா எம்.பி ஆனதால் அவரது தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஜூலை 30 ஆம் தொகுதி நடைபெற்ற பாங்கிபூர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.
இதில், போட்டியிட்ட ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர், 62,954 வாக்குகள் பெற்று, எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நீரஜ் குமார் சின்ஹாவை 18,951 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

தொகுதி மறுவரையறைக்கு பின்னர் 2008 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த தொகுதியில் இதுவரை நடந்த அனைத்து சட்டமன்ற தேர்தல்களிலும் பாஜக சார்பில் அதன் தேசிய தலைவராக உள்ள நிதின் நபினே வெற்றி பெற்று வந்துள்ளார்.
பாஜகவின் கோட்டையாக இருந்த பாங்கிபூர் தொகுதியில் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளது பீகார் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |