ரூ.14.20 கோடிக்கு வாங்கிய CSK வீரர் காயம் - ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா பிரசாந்த் வீர்?
CSK வீரர் பிரசாந்த் வீர், ரஞ்சி தொடரில் காயம் அடைந்துள்ளதால் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.
பிரசாந்த் வீர் காயம்
ரஞ்சி கிண்ண தொடரில், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேச அணிகள் மோதிய போட்டி நேற்று தொடங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற உத்தரபிரதேச அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
pREND4W[
முதலில் துடுப்பாட்டம் ஆடிய ஜார்கண்ட் அணி, 147 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 507 ஓட்டங்கள் குவித்து விளையாடி வருகிறது.
உணவு இடைவேளைக்கு முன்னர், ஜார்கண்ட் வீரர் ஷிகர் மோகன் அடித்த பந்தை, மிட் - ஆப் சைடில் நின்ற பிரசாந்த் வீர் டைவ் செய்து தடுத்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவ ஊழியர்கள் சிறிது நேரம் அவருக்கு முதலுதவி அளித்தனர்.

Credit : UPCA
அதன் பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா?
ஆரம்பகட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில், பிரசாந்த் வீருக்கு குறைந்தது 3 வார காலம் ஓய்வு தேவைப்படும் என கருதப்படுகிறது.
2025 ஐபிஎல் மினி ஏலத்தில், ரூ.14.2 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிரசாந்த் வீரை வாங்கியது.

ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட Un capped இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் பிரசாந்த் வீர்.
2026 ஐபிஎல் தொடர் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்னர் பிரசாந்த் வீர் காயத்தில் இருந்து மீண்டு விடுவாரா, காயத்தில் இருந்து மீண்டாலும் பழைய உடல்தகுதியுடன் இருப்பாரா என்ற கவலை CSK அணிக்கு எழுந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |