நாவூறும் சுவையில் இறால் பிரியாணி: எப்படி செய்வது?
அனைவரும் விரும்பி சாப்பிடும் கடல் உணவான இறாலில் கால்சியம், அயோடின், கொழுப்பு மற்றும் புரதச்சத்துக்கள் உள்ளன.
இந்த கொழுப்பானது நல்ல கொலஸ்டிரால் என்பதால் இதனை உணவில் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இத்தனை நன்மைகள் மிகுந்த இறாலில் சுவையான பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- நெய்- 2 ஸ்பூன்
- பட்டை- 1
- ஏலக்காய்- 3
- பிரியாணி இலை- 1
- கிராம்பு- 4
- வெங்காயம்- 2
- உப்பு- தேவையான அளவு
- இஞ்சி- 1 துண்டு
- பூண்டு- 4 பல்
- பச்சைமிளகாய்- 2
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
- தக்காளி- 2
- மஞ்சள் தூள்- ¼ தூள்
- கரம் மசாலா- 2 ஸ்பூன்
- மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
- இறால்- ½ kg
- புதினா- 1 கைப்பிடி
- பாசுமதி அரிசி- 2 கப்
- தண்ணீர்- 3 கப்
செய்முறை
முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
பின் இதில் வெங்காயம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதங்கியதும் இதில் தக்காளி சேர்த்து வதக்கி பின் அரைத்து வைத்த கலவையை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு வதக்கவும்.
பின் இதில் புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கியதும் இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
மசாலா பச்சை வாசனை போன பின்பு அதில் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை சேர்த்து 10 நிமிடம் நன்கு வதக்கவும்.
பின் இதில் கழுவி வைத்துள்ள பாசுமதி அரிசி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி போட்டு மிதமான தீயில் ஒரு விசில் விட்டு எடுத்து 15 நிமிடம் கழித்து திறந்தால் சுவையான இறால் பிரியாணி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |