கேரளாவின் பிரபலமான இறால் சம்மந்தி.., இலகுவாக செய்வது எப்படி?
கேரளாவின் பிரபலமான மட்டை அரிசியுடன் பிணைந்து சாப்பிடும் சம்மந்தி மிகவும் பிரபலமானது.
அந்தவகையில், வீட்டிலேயே சுவையான கேரளா இறால் சம்மந்தி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- காய்ந்த மிளகாய்- 6
- காய்ந்த இறால்- ½ கப்
- சின்ன வெங்காயம்- 10
- இஞ்சி- 1 துண்டு
- தேங்காய்- ½
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு வாணலில் காய்ந்த மிளகாய் சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுத்துக்கொள்ளவும்.
பின் அதே வாணலில் காய்ந்த இறால் சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுத்து சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

தெடர்ந்து அதில் இஞ்சி, சின்ன வெங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
பின்னர் துருவிய தேங்காய் மற்றும் இறால் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
இறுதியாக இதனை உருண்டையாக பிடித்த வைத்தால் போதும் கேரளா இறால் சம்மந்தி தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |