கலியுகம் குறித்து விஷ்ணு புராணம் கூறிய கணிப்புகள்- என்னென்ன தெரியுமா?
மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு மூவுலகையும் காப்பவராக இருக்கிறார்.
கலியுகத்தைப் பற்றி விஷ்ணு புராணத்தில் பல விஷயங்கள் கணிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், விஷ்ணு புராணத்தில் கலியுகம் குறித்து குறிப்பிடபட்டுள்ள 4 கணிப்புகள் பற்றி பார்க்கலாம்.
விஷ்ணு புராணம் கூறிய கணிப்புகள்
செல்வத்தின் அடிப்படையில் உறவுகள் உருவாகும். இதன் பொருள் உறவு என்பது ஒழுக்கம், அன்பு போன்ற குணாதிசயங்களை விட பணத்தை வைத்தே ஒருவரது மதிப்பு அடையாளப்படுத்தப்படும்.
பணம் அதிகரிக்கும் போது ஒருவரின் தலைக்கனமும் அதற்கேற்றார் போல அதிகரிக்கும்.
கலியுகத்தில் பணத்தை சேர்ப்பதில் மனிதன் மும்முரமாக இருப்பான். அதற்காக எதையும் செய்யத் தயங்க மாட்டான் என விஷ்ணு புராணம் கூறுகிறது.
அவர் செய்யும் அனைத்தும் பணத்துடன் தொடர்புடையதாக இருக்கும். மேலும் அவன் சேர்க்கும் பணத்தில் பெரும்பகுதியை வீடு கட்ட பயன்படுத்துவான். அவ்வாறு கட்டப்படும் வீடுகள் அவனது மதிப்பை வெளிப்படுத்தும் வகையில் அளவில் பெரியவையாக இருக்கும்.
கலியுகம் வரும்போது குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது.
இந்தக் காலக்கட்டத்தில் திருட்டு, கொள்ளை, கொலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதால் அமைதியின்மை சூழல் உருவாகும்.
ஒரு காலத்தில் சிறிய விடயங்களுக்காக ஒருவரையொருவர் கொன்றுவிடுவார்கள் என்றும் விஷ்ணு புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் பயமின்றி நடமாடத் தொடங்கும் காலமாக இது இருக்கும்.
இயற்கை மரணங்களை விட அகால மரணங்கள் அதிக அளவில் இருக்கும்.
கலியுகத்தில் காலநிலை வேகமாக மாறும். கனமழை வெள்ளம் போன்ற நிலைமைகளை இது உருவாக்கும்.
இந்த காலகட்டத்தில், நோய்களின் தாக்கம் அதிகரிப்பதால், தொற்றுநோய்கள் மற்றும் விபத்துகளும் வேகமாக அதிகரிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |