குளிர்சாதனப் பெட்டிக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்: பதைபதைக்கவைக்கும் தகவல்கள்
அமெரிக்காவில், மொடலாகிய அழகிய இளம்பெண் ஒருவர் மாயமான நிலையில், குளிர்சாதனப் பெட்டி ஒன்றிற்குள் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குளிர்சாதனப் பெட்டிக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்
சென்ற மாதம், Maleesa Marie Mooney (31) என்னும் இளம்பெண்ணைக் குறித்து தகவல் எதுவும் இல்லாததால் அவரது குடும்பத்தினர் பொலிசாருக்கு தகவலளிக்க, அவரை, லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள அவரது வீட்டுக்குள்ளேயே, குளிர்சாதனப் பெட்டி ஒன்றிற்குள் உயிரற்ற நிலையில் கண்டுபிடித்தனர் பொலிசார்.
Jourdin Pauline/Instagram
பதைபதைக்கவைக்கும் தகவல்கள்
உடற்கூறு ஆய்வில் Maleesaவின் மரணம் குறித்து பதைபதைக்கவைக்கும் உண்மைகள் தெரியவந்தன. Maleesa, இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவரது மணிக்கட்டுகளும் கணுக்கால்களும் கட்டப்பட்டு, அவர் குளிர்சாதனப் பெட்டி ஒன்றிற்குள் திணித்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அத்துடன், அவர் கடுமையாக தாக்கப்பட்டிருந்தார். Maleesaவை கொடூரமாக தாக்கி கொலை செய்தது யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
தாயாகும் ஆசையிலிருந்த தங்கள் மகள் கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் Maleesaவின் பெற்றோரும், அவரது காதலரும் கடும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |