நிம்மதியாக ஒருநாள் கூட வாழ முடியவில்லை: மூன்று மாத கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்று மாத கர்ப்பிணிப்பெண் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
காதல் திருமணம்
குமரி மாவட்டம் வழிக்கலாம்பாடு செம்பருத்திவிளையைச் சேர்ந்தவர் அர்ச்சனா (23). பட்டதாரி பெண்ணான இவர், 2022ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார்.
கணவர் அபிஷ்மோன் (27) வரதட்சணை கேட்டு அர்ச்சனாவை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கர்ப்பமான அர்ச்சனா கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு காதலனை நம்பி உங்களை விட்டு சென்றேன், ஆனால் நிம்மதியாக ஒருநாள் கூட வாழ முடியவில்லை என்றும், கணவரின் குடும்பத்தார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும் கூறி அழுதுள்ளார்.
பொலிசார் வழக்குப்பதிவு
பின்னர் அவரை சமாதானம் செய்து கணவர் வீட்டிற்கு பெற்றோர் அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயம் அர்ச்சனா தூக்கில் தொங்கியுள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த கணவரின் உறவினர்கள், அர்ச்சனாவின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதற்கிடையில் அர்ச்சனா மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |