8 மாத கர்ப்பிணி பெண் தற்கொலை : கணவர் வீட்டின் முன் பெண்ணின் உடலை புதைத்த உறவினர்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 8 மாத கர்ப்பிணி பெண், வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரதட்சணை கொடுமை
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள மேலசவேரியார் பட்டினத்தை சேர்ந்த நாகேஸ்வரி(22) என்ற பெண்ணுக்கும், மேட்டுகளத்தை சேர்ந்த அரவிந்த்(22) என்ற இளைஞருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
மேலும் நாகேஸ்வரி 8 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார், இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவரது கணவர் வீட்டில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர்.
நாகேஸ்வரியின் மாமியாரும், அவரது உறவினர்களும் சேர்ந்து அந்த பெண்ணுக்கு தொடர்ந்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளனர், அந்த பெண் கோவத்தில் அடிக்கடி அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
@ptdesk
பின்னர் அவரது கணவர் மீண்டும் தன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் தொடர் வற்புறுத்தலால் நாகேஸ்வரி மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வீட்டின் முன் புதைத்த உறவினர்கள்
இதனை தொடர்ந்து பெண்ணின் உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசனையிலிருக்கும் போது, நாகேஸ்வரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டம் நடத்தியுள்ளனர்.
@ptdesk
மேலும் பெண்ணின் உடலை மருத்துவமனையிலிருந்து மீட்டு அவரது கணவரது வீட்டு வாசலில், இறந்த சிசு மற்றும் நாகேஸ்வரியின் உடலை புதைத்து வைத்துள்ளனர்.
இதற்கு நாகேஸ்வரியின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், மேலும் காவல்துறையினர் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நாகேஸ்வரியின் கணவர் மற்றும் அவரது உறவினர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இளம்பெண் வயிற்றில் சிசுவோடு தற்கொலை செய்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.